» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கேரளாவில் பஸ்கள் ஓடவில்லை: கோவையில் இருந்து புறப்பட்ட 50 பஸ்கள் எல்லையில் நிறுத்தம்!
புதன் 9, ஜூலை 2025 11:36:56 AM (IST)
வேலை நிறுத்தம் எதிரொலியாக கேரளாவில் அனைத்தும் பஸ்களும் ஓடவில்லை. இதனால் தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் கேரள எல்லையில் நிறுத்தப்பட்டன.
நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மையமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், 42 தொழிலாளர் நல சட்டங்களை திரும்பபெற கோரி வலியுறுத்தியும் இன்று இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கோவையிலும் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவையில் ஆட்டோக்கள், வேன் கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. குறைந்த அளவிலேயே ஆட்டோர், வேன் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கின. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சங்கத்தினர் பல இடங்களில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதற்கிடையே கேரளாவில் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருவதால், அங்கு பஸ்கள் அனைத்தும் ஓடவில்லை. கேரளாவையொட்டி கோவை மாவட்டம் உள்ளது. கோவையில் இருந்து அன்றாட பணிகளுக்காகவும், கேரளாவில் இருந்து கல்லூரி மற்றும் வேலை உள்ளிட்ட காரணங்களுக்காகவும் தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இதற்காக கோவையில் இருந்து தமிழகம் மற்றும் கேரள போக்குவரத்து கழகம் சார்பில் 50 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று போராட்டம் நடந்த காரணத்தால், இந்த 50 பஸ்களும் ஓடவில்லை. இதேபோல் பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்பட்ட பஸ்களும் ஓடவில்லை.
கோவையில் இருந்து இயக்கப்படும் தமிழக பஸ்கள் கேரள எல்லை வரை இயக்கப்பட்டன. பயணிகள் அதில் பயணித்து அங்கிருந்து வேறு வாகனங்களில் கேரளா சென்றனர். இதன் காரணமாக கோவையில் இருந்து கேரளாவுக்கு வேலைக்கு செல்வோரும், அங்கிருந்து கல்லூரி மற்றும் வேலை விஷயங்களுக்காக கோவை வருவோம் மிகவும் சிரமம் அடைந்தனர்.
பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் ரெயில்களில் பயணித்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். இதனால் கோவை ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் கோவையில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டன. பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பஸ்சில் பயணித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனுமதி மீறி போராட்டம் நடத்துவது அரசியல் கட்சிக்கு அழகல்ல: உயர்நீதிமன்றம் கண்டனம்!
புதன் 9, ஜூலை 2025 5:38:20 PM (IST)

சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆசிரியர்கள் தக்க பாடத்தை கற்பிப்பார்கள்: நயினார் நாகேந்திரன்
புதன் 9, ஜூலை 2025 5:07:26 PM (IST)

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து : 13 பேருக்கு ரயில்வே விசாரணை குழு சம்மன்
புதன் 9, ஜூலை 2025 4:19:04 PM (IST)

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

அதிகாரிகள் கொடுமையால் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை: அன்புமணி குற்றச்சாட்டு
புதன் 9, ஜூலை 2025 10:46:28 AM (IST)

தமிழகத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்!
புதன் 9, ஜூலை 2025 10:35:19 AM (IST)
