» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போலீஸ்காரர் கைது!
வெள்ளி 4, ஜூலை 2025 10:53:27 AM (IST)
தென்காசி அருகே வீடுபுகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் அருகே உள்ள அழகுநாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகுமார் (29). இவர் தென்காசி ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து யாரும் இல்லாததை அறிந்து இளம்பெண் ஒருவர் குளிப்பதை எட்டிப்பார்த்தார்.
இதைக் கண்டு அந்த பெண் கூச்சலிடவே மனோகுமார் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அந்த பெண் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் உடனடியாக குருவிகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மனோகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொன்முடி மீதான வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!!
வெள்ளி 4, ஜூலை 2025 5:23:45 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் விஜய்: செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
வெள்ளி 4, ஜூலை 2025 5:06:04 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

காதலர்களை பார்த்த சிறுவன் கொடூர கொலை: கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது
வெள்ளி 4, ஜூலை 2025 4:27:54 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை: கணவர் வெறிச்செயல்!!
வெள்ளி 4, ஜூலை 2025 11:36:36 AM (IST)
