» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை: கணவர் வெறிச்செயல்!!
வெள்ளி 4, ஜூலை 2025 11:36:36 AM (IST)
திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலர் கோமதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது கணவர் போலீசில் சரண் அடைந்துள்ளார்.
திருநின்றவூர் பெரிய காலையூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். இவர் திருநின்றவூர் விசிக நகர செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி கோமதி 26வது வார்டு கவுன்சியராகவும், திருவள்ளூர் நகராட்சி தலைவராகவும் இருந்து வருகிறார். கோமதி ஸ்டீபன் ராஜ் தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி 4 ஆண் குழந்தைகள் உள்ளனர். வேறு நபருடன் பழகி வந்த கோமதியை கணவர் ஸ்டீபன்ராஜ் கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜெயராம் நகர் அருகே தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கோமதியுடன் ஸ்டீபன்ராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆண் நண்பர் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி கோமதியை வெட்டியதாகக் கூறப்படுகிறது.
ரத்த வெள்ளத்தில் சரிந்த கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் கணவர் ஸ்டீபன்ராஜ் சரணடைந்துள்ளார். ஸ்டீபன் ராஜை கைது செய்த போலீசார் கொலை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பொங்கல் விழா கோலாகலம்: ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
வியாழன் 15, ஜனவரி 2026 3:45:54 PM (IST)

வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை : தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது
வியாழன் 15, ஜனவரி 2026 9:05:50 AM (IST)

நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 18-ஆம் தேதி சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 9:02:13 PM (IST)

கல்லிடைக்குறிச்சி அஞ்சலகத்தில் சமத்துவப் பொங்கல்
புதன் 14, ஜனவரி 2026 8:55:43 PM (IST)

பராசக்தி படத்தில் எந்த சர்ச்சையும் இல்லை : சிவகார்த்திகேயன்
புதன் 14, ஜனவரி 2026 5:06:41 PM (IST)

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு: அன்பில் மகேஷ் அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 5:01:38 PM (IST)

