» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 5 புதிய கிளைகள் திறப்பு விழா
சனி 28, ஜூன் 2025 11:27:28 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் 5 புதிய கிளைகள் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
இதுகுறித்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ். நாயர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு; தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிட். ஒரு தலை சிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி (பாரத ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்றது), பங்கு சந்தைகளில் தனது பங்கினை பட்டியலிட்டதை அடுத்து தனது தொலைநோக்கு பார்வையாக மீண்டும் இந்தியா முழுவதுமான விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் ஒரு பெயர் பெற்ற பழைமையான தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கிவரும் இந்த வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருகிறது.
தொடர்ந்து இலாபம் ஈட்டியும் வருகிறது. இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 583 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களை கொண்டு சுமார் 53 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது.
தற்போது ஐந்து புதிய கிளைகளை ஜமீன் ஊத்துக்குளி - கோயம்புத்தூர் மாவட்டம், மங்கலம் - திருப்பூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் - திருநெல்வேலி மாவட்டம், கீழ பனங்காடி - மதுரை மாவட்டம் மற்றும் மோகனூர் - நாமக்கல் மாவட்டம் ஆகிய இடங்களில் ATM / CRM வசதியுடன் துவக்கியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் ஜமீன் ஊத்துக்குளியில் 579வது கிளையை ஏ.எம்.ஆர். அருண்குமார் கலிங்கராயர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய கிளையை துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் 580வது கிளையை அமிர்தம் ஜவுளி ஆலைகள் பங்குதாரர் சி.ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய கிளையை துவக்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் 581வது கிளையை பாளையங்கோட்டை சேவியர் இன்ஸ்டியூட் ஆஃப் பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேசன் இயக்குநர் பங்குத்தந்தை ஏ.மைக்கேல் ஜான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய கிளையை துவக்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் கீழ பனங்காடியில் 582வது கிளையை சி.இ.ஓ.எ. கல்விக் குழுமத்தின் நிறுவனத்தலைவர் முனைவர். மை. அலசி. இராசா கிளைமாக்சு ஐ.ஆர்.எஸ்., சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய கிளையை துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் 583வது கிளையை எம்.எம்.மருத்துவமனை தலைமை அதிகாரி முடநீக்கியல் மருத்துவர் எம்.சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய கிளையை துவக்கி வைத்தார்.
வங்கியின் மண்டல தலைவர்கள், ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த திறப்பு விழாவினை சிறப்பித்தார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

பொன்முடி மீதான வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!!
வெள்ளி 4, ஜூலை 2025 5:23:45 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் விஜய்: செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
வெள்ளி 4, ஜூலை 2025 5:06:04 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

காதலர்களை பார்த்த சிறுவன் கொடூர கொலை: கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது
வெள்ளி 4, ஜூலை 2025 4:27:54 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)
