» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 40 சதவீதம் அரிசி உற்பத்தி குறைந்தது : தூத்துக்குடியில் பி.ஆர். பாண்டியன் பேட்டி
வெள்ளி 27, ஜூன் 2025 4:41:32 PM (IST)
தமிழக அரசு தொழில்புரட்சி என்ற பெயரில் எடுக்கின்ற நடவடிக்கையால் கடந்த 4 ஆண்டுகளில் அரிசி உற்பத்தி 40 சதவீதம் குறைந்துள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறினார்.
நாகர்கோவிலில் மலைத்தோட்ட விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, "தென் மாவட்டத்தின் மிகப்பெரிய நதி ஆதாரமான தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் விலக்கு அழிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கூட்டுறவு வங்கிகளில் சிபில் ஸ்கோர் முறையில் கடன் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த நெல்லுக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை பட்டுவாடா செய்யாமல் தமிழ்நாடு வாணிப கழகம் வஞ்சித்து வருகிறது. கொள்முதலில் தனியாரை அனுமதித்ததால் பணம் விநியோகம் செய்ய முடியாமல் தமிழக அரசு தவித்து வருகிறது.
காவிரி நதிநீர் பங்கேட்டில் மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட வேண்டும். தமிழகத்தில் காவிரியில் அதிகமாக கழிவுநீர் கலக்கிறது. இதற்கு தமிழக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். இதனை தடுப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. காவேரி பாசன பகுதியில் கதவணைகள் ரூ.18 கோடியில் சீரமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
தமிழகத்தில் 250 கோடி ரூபாய் செலவில் நதிகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட அறிவிப்பு அதோடு நின்று விட்டது. இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தமிழகத்தில் அரிசி உற்பத்தி 40 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு புள்ளிவிவரத்தோடு தெளிவுபடுத்தி உள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்கிறோம் என்ற பெயரில் உழவர்களின் முகவரி அளிக்க தமிழக அரசு முயற்சிக்கக் கூடாது. விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் தாக்குதலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் காய்கறிகள் தோட்டக்கலை பயிர்கள், பருத்தி உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விலை நிர்ணய குழு அமைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

பொன்முடி மீதான வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!!
வெள்ளி 4, ஜூலை 2025 5:23:45 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் விஜய்: செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
வெள்ளி 4, ஜூலை 2025 5:06:04 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

காதலர்களை பார்த்த சிறுவன் கொடூர கொலை: கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது
வெள்ளி 4, ஜூலை 2025 4:27:54 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)
