» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் இரயில்பாதைக்கு இணையாக சாலை அமைக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தீர்மானம்!

வியாழன் 22, மே 2025 3:29:02 PM (IST)



தூத்துக்குடியிலிருந்து வாஞ்சிமணியாச்சி வரை இரயில்பாதைக்கு இணையாக சாலை அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகர 34வது மாநாடு கட்சி அலுவலகத்தில் பாண்டி, மனோன்மணி, முனியசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர் பி.கரும்பன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பி.ஞானசேகர், அலுவலக செயலாளர் எஸ்மாடசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநகர செயலாளர் ஜி.தனலெட்சுமி அறிக்கை சமர்ப்பித்து விளக்க உரையாற்றினார்.

மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன : வேகமாக வளர்ந்து வரும் தூத்துக்குடி மாநகர மக்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான இரயில் சேவையே கிடைத்து வருகிறது. தூத்துக்குடியிலிருந்து வாஞ்சிமணியாச்சி வரை இரயில்பாதைக்கு இணையாக சாலை அமைத்தால் அதிக எண்ணிக்கையிலான இரயில் சேவை தூத்துக்குடி மாநகர மக்களுக்கு கிடைக்கும். 

மேலும் இந்த சாலையில் செல்லும் ஊராட்சி பகுதிகளிலும் வேகமாக வளர்ச்சி பெறும் என்ற நோக்கில் தமிழக அரசு இந்த திட்டத்தை அறிவித்து முதல்கட்ட நிதிதியை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கியது என்ற போதிலும், இந்த திட்டத்திற்கான எந்த வேலையும் நடந்ததாக தெரியவில்லை. எனவே தமிழக அரசு இந்த திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கி இந்த திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள் உள்ள சி.வ. குளம், பண்டாரம்பட்டி ஊரணி, அதே போன்று கோரம்பள்ளம் குளம் இவைகளை முறையாக தூர்வாரியும், கரைகளை செம்மைப்படுத்தியும் பராமரித்து எதிர் வரும் மழைக்காலத்தில் தூத்துக்குடி மாநகருககுள் வெள்ளநீர் வருவதை தடுக்க தக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory