» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சனி 10, மே 2025 12:30:31 PM (IST)

தமிழ்நாட்டில் இன்று முதல் 12ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 13ம் தேதி முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசைக் காற்றும் இணையும் பகுதி நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவை தவிர தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் 13ம் தேதியில் தொடங்க உள்ளது.

இந்த நிகழ்வுகளின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த கா்ற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.

இதையடுத்து, இன்று முதல் 12ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 13ம் தேதி முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும். இருப்பினும், 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரிக்கும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory