» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக பொதுக்கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்விளக்கு கம்பம்: நூலிழையில் தப்பிய ஆ.ராசா!

திங்கள் 5, மே 2025 11:35:09 AM (IST)



மயிலாடுதுறையில் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மின் விளக்கு கம்பம் திடீரென சாய்ந்தது. இதில், ஆ.ராசா எம்.பி. நூலிழையில் உயிர் தப்பினார்.

மயிலாடுதுறை நகர தி.மு.க. சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சின்ன கடை வீதியில் நேற்று இரவு நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா எம்.பி. பேசிக்கொண்டு இருந்தார். அப்போது பலத்த காற்று வீசியதால் மேடையின் அருகே பொருத்தப்பட்டிருந்த அதிக வெளிச்சம் தருவதற்காக அமைக்கப்பட்டு இருந்த மின்விளக்கு கம்பம் திடீரென்று சாய்ந்து ஆ.ராசா எம்.பி. பேசிக்கொண்டு இருந்த மைக் வைக்கப்பட்டு இருந்த 'போடியம்' மீது விழுந்தது.

உடனே சுதாரித்துக்கொண்ட ஆ.ராசா எம்.பி. தான் பேசிக்கொண்டு இருந்த மேடை முன்பு இருந்து சற்று தள்ளி நகர்ந்து சென்று விட்டார். இதனால் அவர் எந்தவித காயமும் இன்றி நூலிழையில் உயிர் தப்பினார். இதனையடுத்து உடனடியாக பேச்சை நிறுத்திய ஆ.ராசா எம்.பி. அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார். தொடர்ந்து மழை பெய்ததால் கூட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் கூட்டம் நடந்த இடத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

ஆ.ராசா எம்.பி. பேசிக்கொண்டு இருந்த மைக் மீது மின்கம்பம் விழுந்தது இதில் அவர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவத்தால் மயிலாடுதுறையில் நேற்று பெரும் பரபரப்பு நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory