» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் ரூ.23கோடி மதிப்புள்ள வைரம் பறிமுதல் : கொள்ளையர்கள் 4 பேர் கைது
திங்கள் 5, மே 2025 10:09:13 AM (IST)
சென்னையில் தொழிலதிபரிடம் ரூ. 23 கோடி மதிப்பிலான வைரத்தை கொள்ளையடித்த வழக்கில் 4பேரை தூத்துக்குடி மாவட்ட எஸ்பியின் சிறப்பு தனிப்படை போலீசார் கைது செய்துள்னர்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவர் சந்திரசேகா் (70), விலையுயா்ந்த பழைய பொருள்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா். இதனிடையே, மதுரையைச் சோ்ந்த தொழிலதிபருக்குச் சொந்தமான 17 கேரட் வைர நகை விற்பனைக்கு உள்ளதாகவும், அதனை விற்பனை செய்து தரும்படியும் இடைத்தரகா்களான சென்னை வில்லிவாக்கத்தைச் சோ்ந்த ராகுல் (30), மணலி சேக்காடு பகுதியைச் சோ்ந்த ஆரோக்கியராஜ் (45) மற்றும் சைதாப்பேட்டையைச் சோ்ந்த சுப்பன் (45) ஆகியோரை அணுகியுள்ளாா்.
இதையடுத்து வைரத்தை வாங்குவதற்காக, இடைத்தரகா்கள் தங்களுடன் ராஜன் மற்றும் அவரின் நண்பா் விஜய் மற்றும் உதவியாளா் அருணாச்சலம் ஆகியோரை அழைத்துக்கொண்டு சந்திரசேகா் வீட்டுக்குச் சென்றுள்ளனா். அங்கு அவா் வைத்திருந்த 17 கேரட் வைர நகையை பரிசோதித்ததுடன், அதற்கு ரூ.23 கோடி விலை பேசி உறுதியளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனா்.
இந்நிலையில், நேற்று சந்திரசேகரை தொடா்புகொண்ட இடைத்தரகா்கள், நகை வாங்கும் நபா்கள் அதற்கான பணத்தை கொண்டு வந்திருப்பதாகவும், அதை சென்னை வடபழனியிலுள்ள தனியாா் ஹோட்டலில் வைத்து தருவதாகவும் கூறி, அங்குள்ள ஒரு அறைக்கு சந்திரசேகரை வர வைத்துள்ளனா்.
ஹோட்டலுக்கு தனது வளா்ப்பு மகளான ஜானகி (27) என்பவருடன் வந்திருந்த சந்திரசேகா், குறிப்பிட்ட அறைக்கு தனியாக வைர நகையுடன் சென்றுள்ளாா். ஆனால் நீண்ட நேரமாகியும் சந்திரசேகா் வெளியே வராததால் சந்தேகமடைந்த ஜானகி, அறைக்குச் சென்று பாா்த்தபோது, அங்கு சந்திரசேகரின் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு, வைர நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்நிலையில், சென்னையில் வைரத்தை கொள்ளையடித்துவிட்டு, காரில் வந்தபோது, புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியை கடக்க முயன்றபோது தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜானின் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் சென்னையில் தொழிலதிபரை ஹோட்டல் அறையில் கட்டிப்போட்டுவிட்டு வைரத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.
இது தொடர்பாக சென்னை ஐயப்பதங்கல் கற்பக விநாயகர் கோயில் தெரு, லாசர் மகன் ஜான் லாய்ட் (34), வளசரவாக்கம் காமாட்சி நகர், திருப்புகழ் தெரு, சிங்கராஜ் மகன் விஜய் (24), திருவேற்காடு, வள்ளி கொல்லம் மேடு, சிவன் கோயில் தெரு, ராஜேஸ் மகன் ரத்தீஷ் (28), ராமநாடு மாவட்டம் பரமக்குடி, பொன்னையா புரம், காந்தி மகன் அருண் பாண்டியராஜன் (32), ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் சிப்காட் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் தலை துண்டித்து படுகொலை: பட்டுக்கோட்டை அருகே பயங்கரம்!
செவ்வாய் 6, மே 2025 10:27:35 AM (IST)

அதிமுக ஆட்சி மலர்ந்ததும் வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் : எடப்பாடி பழனிசாமி
திங்கள் 5, மே 2025 3:59:37 PM (IST)

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம், நவீன நூலகம்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திங்கள் 5, மே 2025 3:30:21 PM (IST)

பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 5, மே 2025 3:14:08 PM (IST)

நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்: திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல்!
திங்கள் 5, மே 2025 12:45:01 PM (IST)

திமுக பொதுக்கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்விளக்கு கம்பம்: நூலிழையில் தப்பிய ஆ.ராசா!
திங்கள் 5, மே 2025 11:35:09 AM (IST)
