» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் தேவாலயத்திற்குள் நுழைந்து ஊழியருக்கு வெட்டு: வாலிபர் கைது
வியாழன் 1, மே 2025 8:22:26 AM (IST)
தூத்துக்குடியில் கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் நுழைந்து ஆலய ஊழியரை அரிவாளால் வெட்டியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தெர்மல்நகர் கேம்ப்-1 பகுதியில் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில், பணியாளராக வேலை செய்பவர் அதே பகுதியைச் சேர்ந்த சாமுவேல் அந்தோணிராஜ் (54). இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் கிறிஸ்தவ குழந்தைகளுக்கு பைபிள் குறித்து பாடம் கற்றுக்கொடுத்து கொண்டிருந்தாராம்.
அப்போது, ஊரணி ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தடை செய்யப்பட்ட புகையிலையை பயன்படுத்தினாராம். இதை சாமுவேல் அந்தோணிராஜ் கண்டித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த அச்சிறுவன், தனது நண்பர்களுடன் மதுபோதையில் வந்து தகராறில் ஈடுபட்டு, சாமுவேல் அந்தோணி ராஜை தாக்கி, அவரது செல்போனை உடைத்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த முகமது மீரான் உசேன் (20) என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும், தப்பிச் சென்ற இளஞ்சிறார்களைத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக ஆட்சி மலர்ந்ததும் வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் : எடப்பாடி பழனிசாமி
திங்கள் 5, மே 2025 3:59:37 PM (IST)

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம், நவீன நூலகம்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திங்கள் 5, மே 2025 3:30:21 PM (IST)

பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 5, மே 2025 3:14:08 PM (IST)

நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்: திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல்!
திங்கள் 5, மே 2025 12:45:01 PM (IST)

திமுக பொதுக்கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்விளக்கு கம்பம்: நூலிழையில் தப்பிய ஆ.ராசா!
திங்கள் 5, மே 2025 11:35:09 AM (IST)

புதையல் எடுத்துக் கொடுப்பதாக கூறி தம்பதியிடம் ரூ.8 லட்சம் பறிப்பு : 10 பேர் கும்பல் கைது
திங்கள் 5, மே 2025 11:32:45 AM (IST)
