» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நடிகர் சங்கம் பதவி நீட்டிப்புக்கு எதிரான வழக்கு: கார்த்தி, விஷால் பதிலளிக்க உத்தரவு
புதன் 30, ஏப்ரல் 2025 4:30:13 PM (IST)

தென்னிந்திய நடிகர் சங்கம் பதவி நீட்டிப்புக்கு எதிரான வழக்கில் நிர்வாகிகள் ஜூன் 4ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்ததை எதிர்த்த வழக்கில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என சங்க உறுப்பினர் நம்பிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பதவி காலத்தை நீட்டித்தது சங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு விரோதமானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் நடத்தும் வரை எந்த முடிவுகளும் எடுக்கக் கூடாது என தற்போதைய நிர்வாகிகளுக்கு உத்தரவிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில், தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் ஜூன் 4ம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக ஆட்சி மலர்ந்ததும் வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் : எடப்பாடி பழனிசாமி
திங்கள் 5, மே 2025 3:59:37 PM (IST)

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம், நவீன நூலகம்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திங்கள் 5, மே 2025 3:30:21 PM (IST)

பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 5, மே 2025 3:14:08 PM (IST)

நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்: திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல்!
திங்கள் 5, மே 2025 12:45:01 PM (IST)

திமுக பொதுக்கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்விளக்கு கம்பம்: நூலிழையில் தப்பிய ஆ.ராசா!
திங்கள் 5, மே 2025 11:35:09 AM (IST)

புதையல் எடுத்துக் கொடுப்பதாக கூறி தம்பதியிடம் ரூ.8 லட்சம் பறிப்பு : 10 பேர் கும்பல் கைது
திங்கள் 5, மே 2025 11:32:45 AM (IST)
