» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண்ணை இழிவாகப் பேசுவது சுயமரியாதை அல்ல: கனிமொழி எம்பி பேச்சு

சனி 26, ஏப்ரல் 2025 5:03:44 PM (IST)



"பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரராக இருக்க முடியாது" என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.

கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கலந்துகொண்டு பேசுகையில் "பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரராக இருக்க முடியாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வழங்குபவர்தான் சுயமரியாதைக்காரர். ஆண், பெண், நிறம், பொருளாதாரம் என பல்வேறு வகைகளில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. 

மதவாதிகள் சிலர், தாங்கள் உருவாக்கிய கட்டமைப்பை உடைக்கக் கூடாது என நினைக்கின்றனர். தவறான அரசியல் மூலம் தமிழ்நாட்டில் சாதி என்பது மெல்ல நுழைகிறது, அதைத் தவிர்க்க வேண்டும். தேர்தல் வெற்றி, கட்சிப் பொறுப்பு என எத்தனையோ பொறுப்புகள் எனக்கு கிடைத்தாலும், 'என் வீட்டில் அனைவரும் திமுக. என் மகள் மட்டும் திக' என என் அப்பா கருணாநிதி கூறியதை மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன்" என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory