» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தடைசெய்யப்பட்ட மையோனைஸ் பயன்படுத்தும் உணவு வியாபாரிகள் மீது நடவடிக்கை: அரசு உத்தரவு!

சனி 26, ஏப்ரல் 2025 12:04:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ள முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழ்நாடு அரசு அரசிதழ் எண்: 161-ஏப்ரல் 8, 2025ன் படி. முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ்க்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரேபியவகை உணவுகளான தந்தூரி சிக்கன், பார்பிகியூ ஷவர்மா போன்றவை இளம் தலைமுறையினரை அதிகளவு கவர்ந்துள்ளது. வறுத்த கறி, பொரித்த சிப்ஸ்கள், பிரென்ச் பிரைஸ் உள்ளிட்டவைகளுக்கு தொட்டு கொள்ள மையோனைஸ் பயன்படுத்தப்படுகிறது. இந்த மையோனைஸை தயாரிக்க மற்றும் விற்பனை செய்ய தமிழக அரசு ஓராண்டு தடை விதித்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு உணவு பாதுகாப்புதுறை சார்பில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழில் கூறப்பட்டுள்ளதாவது: மயோனைஸ் தெரு உணவு வகைகள் மற்றும் ஷவர்மா மற்றும் வறுக்கப்பட்ட மற்றும் தந்தூரி போன்ற அசைவ உணவுகள், போன்றவற்றில் ஒரு முக்கிய சேர்க்கையாக மாறியுள்ளது. 

இந்நிலையில் தமிழக அரசின் அறிவிப்பின்படி, சால்மோனெல்லா டைபிமுரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சயா கோலி மற்றும் லிஸ்டீரியா மொனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால், முட்டைகளால் செய்யப்பட்ட மயோனைஸ் உணவு மூலம் பரவும் நோய்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும் முட்டையில் செய்யக்கூடிய மயோனைஸில் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து மிக அதிகம. உணவகங்கள், கேட்டரிங் சேவைகள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் உள்பட அனைத்து உணவு நிறுவனங்களும் மூல முட்டை அடிப்படையிலான மயோனைஸின் பயன்பாடு, விற்பனை அல்லது விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறுபவர்கள் அபராதம், உரிமம் ரத்துசெய்தல் அல்லது சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வார்கள். 

ஏப்ரல் 8ம் தேதியிலிருந்து ஓராண்டு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். உணவுப் பாதுகாப்புத் துறை மாநிலம் தழுவிய அளவில் ஆய்வுகளை மேற்கொண்டு, கடைபிடிக்க வேண்டும். மயோனைஸை சார்ந்த பொருட்களை வாங்கும் போது நுகர்வோர் எச்சரிக்கையுடன் செயல்படவும், பொருட்களை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட மையோனைஸ் பயன்படுத்தும் உணவு வியாபாரிகள் மீது உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், அறிவுறுத்தியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory