» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 8:24:54 PM (IST)
நெல்லை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயிலில் வருகிற மே 3-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
நெல்லையிலிருந்து செங்கோட்டை மற்றும் செங்கோட்டையிலிருந்து நெல்லைக்கு தினசரி நான்கு முறை பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகிறது. 12 பெட்டிகளை மட்டும் கொண்டு இயக்கப்படும் இந்த ரயிலில் ஆயிரக்கணக் கானோர் பயணம் செய்வதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் வேலைக்கு சென்று திரும்புவோர் இதனால் கடும் அவஸ்தையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் நேற்று இந்த ரயிலில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மதுரையில் நடந்த ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் அவர் இது குறித்து வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து இந்த ரயிலில் கூடுதலாக நான்கு பெட்டிகளை இணைக்க தென்னக ரயில்வே முதன்மை மேலாளர் (இயக்கம் ) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி என்.டி.பி.எல். ஊழியர்கள் 23வது நாளாக ஸ்ட்ரைக் : மின் உற்பத்தி முற்றிலும் பாதிப்பு
வெள்ளி 9, மே 2025 11:25:02 AM (IST)

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)

ரெட்ரோ படத்தின் வெற்றிவிழா : அகரம் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி வழங்கிய சூர்யா!
வியாழன் 8, மே 2025 11:54:49 AM (IST)
