» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆளுநர் ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு: அரசு பல்கலை துணைவேந்தர்கள் புறக்கணிப்பு!

வெள்ளி 25, ஏப்ரல் 2025 12:47:35 PM (IST)



ஊட்டியில் ஆளுநர் ரவி தலைமையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலை துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளனர். 

பல்கலை துணைவேந்தர்களின் மாநாடு, ஆளுநர் ரவி தலைமையில் ஊட்டியில் தொடங்கியது. துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். மாநாட்டில், 32 பல்கலைகளின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசு பல்கலை துணைவேந்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

தமிழகத்தில் ஆளுநராக ரவி பொறுப்பேற்ற பின், அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களின் மாநாட்டை ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நடத்தி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக துணைவேந்தர்கள் மாநாடு நடத்தப்பட்ட நிலையில் நான்காவது ஆண்டாக இன்று (ஏப்ரல் 25) ஊட்டி ராஜ்பவனில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். மாநாட்டில் பங்கேற்குமாறு தமிழகத்தில் உள்ள மாநில பல்கலை துணைவேந்தர்கள் 21 பேர், தனியார் பல்கலை துணைவேந்தர் 25 பேர், மத்திய பல்கலை துணைவேந்தர் மூவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 32 பல்கலைகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். எனினும் தமிழக அரசு பல்கலைகளின் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.


மக்கள் கருத்து

TamilanApr 25, 2025 - 01:30:16 PM | Posted IP 172.7*****

Thamilaga palgalaikalaga thunaiventhargal mirattapattanara?

TamilanApr 25, 2025 - 01:27:39 PM | Posted IP 162.1*****

Thamilaga palgalaikalaga thunaiventhargal mirattapattanara?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory