» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய விவகாரம்: மன்னிப்பு கோரினார் அமைச்சர் பொன்முடி

சனி 12, ஏப்ரல் 2025 5:40:59 PM (IST)

பெண்கள் குறித்து தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் கே.தங்கராசு நூற்றாண்டு விழா சென்னையில் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் திமுக எம்.பி. கனிமொழியும் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டது. திமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து பொன்முடி விடுவிக்கப்படுகிறார் என்று திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து திமுக துணை பொதுச் செயலாளராக திருச்சி சிவா எம்.பி. நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் திமுக முன்னாள் துணை பொதுச் செயலாளரும், வனத்துறை அமைச்சருமான பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

டேய்Apr 13, 2025 - 06:19:45 PM | Posted IP 172.7*****

மன்னிப்பு எல்லாம் கிடையாது , ஊர் பொதுமக்கள் உங்களை எச்சி துப்ப காத்துஇருக்கிறார்கள் வாங்கிட்டு தான் போகணும்

தமிழன்Apr 12, 2025 - 06:17:21 PM | Posted IP 172.7*****

தவறாக பேசிவிட்டு மன்னிப்பு தேவையா. மன்னிப்பு கேட்பதற்கு பதில் உங்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிடுங்கள்.உங்களைப்போல் ஆட்களால் செல்வாக்கு குறைய ஆரம்பித்துவிட்டது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory