» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காக்கும் கரங்கள் திட்டத்தில் பெண்களுக்கு வயது வரம்பு தளர்வு: ஆட்சியர் தகவல்

வெள்ளி 28, மார்ச் 2025 4:42:24 PM (IST)

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் கடனுதவி கோரி விண்ணப்பித்திட முன்னாள் படைவீரர்களை சார்ந்துள்ள பெண்களுக்கு வயது வரம்பு இல்லை என்று மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் 78-வது சுதந்திர தினத்தன்று 15.08.2024 ஆற்றிய சுதந்திரதின உரையின்போது முன்னாள் படைவீரர்கள் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ஒருகோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவும், இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும் 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. 

தற்போது, முன்னாள் படைவீரர்கள் அவர்தம் விதவையர் மற்றும் அவரைச் சார்ந்துள்ள திருமணமாகாத மகள் / விதவை மகள் மற்றும் படைப்பணியின்போது உயிர்நீத்த படைவீரரின் விதவையர் / அவரைச் சார்ந்துள்ள திருமணமாகாத மகள் / விதவை மகள் ஆகியோருக்கு முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் வாயிலாக கடனுதவி கோரி விண்ணப்பித்திட வயது வரம்பு இல்லை என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் படைவீரர் / விதவையரின் திருமணமாகாத மகனுக்கு அதிக பட்சமாக 25 வயது வரை மட்டுமே இத்திட்டத்தின் வாயிலாக விண்ணப்பித்திட இயலும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் PMEGP / PMFME /UYEGP/NEEDS/AABCS/BLISS/ Schemes under any TAHDCO or under any other Scheme for resettlement through Government of India (or) State Government ஆகிய இத்திட்டங்களில் பலன் பெற்றவர்கள் தகுதியற்றவர்களாவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / அவர்தம் சார்ந்தோர்கள் மற்றும் படைப்பணியின்போது உயிர்நீத்த படைவீரரின் சார்ந்தோர்கள் இவ்வயது வரம்பு சலுகையினை பயன்படுத்தி இத்திட்டத்தில் கடனுதவி பெற்று பயன்பெறுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory