» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்? - தமிழக வெற்றிக்கழகம் விளக்கம்

புதன் 19, மார்ச் 2025 10:29:04 AM (IST)

விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு அக்கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக செயல்பட்டு வருபவர் ஆதவ் அர்ஜுனா. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா கடந்த ஜனவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

இதனிடையே, தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டதாக இன்று சமூகவலைதளத்தில் தகவல்கள் பரவின. இதனால், தவெக வட்டாரத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படதாக வெளியான தகவலுக்கு தவெக மறுப்பு தெரிவித்துள்ளது. கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக பரவிய தகவல் வதந்தி என்றும், சமூகவலைதளத்தில் போலி செய்தி பரவி வருவதாகவும் தவெக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory