» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல் ஒத்திவைப்பு: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!

செவ்வாய் 30, டிசம்பர் 2025 10:05:26 AM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் இன்று நடைபெற இருந்த தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக திருமண்டல நிர்வாகி ஜோதிமணி அறிவித்துள்ளார்.

கடந்த 27.10.2025 தேதியிட்ட சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை பெஞ்ச் உத்தரவின்படி தூத்துக்குடி -நாசரேத் திருமண்டலநிர் வாகியாக மீண்டும் நீதிபதி ஜோதி மணி பொறுப்பேற்று தேர்தல்களை கடந்த 3.9.2025 அன்று விட்ட இடத்தில் இருந்து தொடர வேண்டும் என்ற உயர்நீதி மன்ற உத்தரவின் அடிப்படையில், புதிய தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். 

அதன்படி, முதல் நான்கு கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. இறுதியாக இன்றும், நாளையும் டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் நாசரேத்தில் வைத்து தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல நிர்வாகிகளான உபதலைவர், லே செயலர், குருத்துவ காரியதரிசி, திருமண்டல பொருளாளர் ஆகியோருக்கான தேர்தல் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், கடந்த 26ந் தேதி விடுமுறைக் கால நீதிமன்றம் 30.12.2025 மற்றும் 31.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்தல்களுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக மனுதாரரின் வழக்கறிஞர் தடை உத்தரவு குறித்து நிர்வாகிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளதைத் தொடர்ந்து 30.12.2025 மற்றும் 31.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த சி.எஸ்.ஐ. தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல்கள் மற்றும் பொதுக்குழு ஒத்திவைக்கப்படுவதாகவும் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகி ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory