» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி ஆக்கி வீரர் உள்பட 2 பேர் பலி: நெல்லையில் பரிதாபம்
புதன் 19, மார்ச் 2025 8:35:58 AM (IST)
நெல்லையில் கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி ஆக்கி வீரர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நெல்லை கொக்கிரகுளம் கண்ணப்பநாயனார் தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகன் வேலாயுதம் (28). ஆக்கி வீரரான இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். மேலும் தனது தந்தைக்கு உதவியாக வீட்டில் உள்ள மாடுகளை பராமரித்து பால் வியாபாரமும் செய்து வந்தார்.
இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ரவி (45). இவர் கஜேந்திரனுக்கு உதவியாக அவருடன் சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கஜேந்திரன் வீட்டில் குளியலறை கட்டும்பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த கட்டிடத்திற்கு தண்ணீர் நனைப்பதற்கு நேற்று காலையில் வேலாயுதம் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதனை அங்கு வந்த ரவி பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் வேலாயுதத்தை காப்பாற்ற சென்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்து 2 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையில் கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி ஆக்கி வீரர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

உயர்கல்வித்துறை அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: டிடிவி தினகரன்
வெள்ளி 11, ஜூலை 2025 12:27:27 PM (IST)

புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி
வெள்ளி 11, ஜூலை 2025 12:17:16 PM (IST)

அங்கன்வாடிகள் மூடப்படும் என்பது தவறான தகவல்: அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்
வெள்ளி 11, ஜூலை 2025 11:59:39 AM (IST)

சூடுபிடிக்கும் தேர்தளம் களம்: 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
வெள்ளி 11, ஜூலை 2025 11:16:32 AM (IST)

அன்புமணி எனது பெயரை பயன்படுத்த கூடாது: ராமதாஸ் அதிரடி!
வெள்ளி 11, ஜூலை 2025 11:02:01 AM (IST)
