» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் சேர 9.14 லட்சம் விண்ணப்பம்: தேர்தல் ஆணையம் தகவல்
திங்கள் 5, ஜனவரி 2026 10:57:45 AM (IST)
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9.14 லட்சம் பேர் விண்ணப்பம் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு உள்ளனர்.
தற்போது வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில், சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான 4 ஆயிரத்து 79 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு தீவிர முகாம் கடந்த டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் நடத்த தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி நேற்று வரை சிறப்பு முகாம்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6-ஐ உறுதிமொழி படிவத்துடனும், இறந்தவர்களின் பெயர்களை நீக்க படிவம் 7-ஐ, முகவரி மாற்றம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கைக்காக படிவம்-8ஐ ஆர்வமுடன் அளித்தனர்.
புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள் பிறப்பு சான்றிதழ் அல்லது கல்வி சான்று, ஆதார் அட்டை, 2005-ம் ஆண்டுக்கான பெற்றோர் வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்கள் சமர்ப்பித்தனர்.
வீடுகளை மாற்றிக் கொண்டு இடமாறி சென்ற வாக்காளர்கள், அந்த இடத்திற்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தங்களை வாக்காளராக மீண்டும் சேர்த்துக் கொள்வதற்காக படிவம் எண் 6ஐ அளித்தனர். இந்தப் படிவங்களை வாங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் உதவி புரிந்தனர்.
தமிழகத்தில் தி.மு.க.விற்கு 68 ஆயிரத்து 286, அ.தி.மு.க.விற்கு 67 ஆயிரத்து 286, பா.ஜ.க.விற்கு 61 ஆயிரத்து 438, காங்கிரசிற்கு 30 ஆயிரத்து 592 தேர்தல் முகவர்கள் உள்ளனர். அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் சென்று அவர்களிடம் படிவத்தை பூர்த்தி செய்து வாங்கி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர்.
தமிழகத்தில் 4 நாட்கள் நடந்த முகாம் நிறைவடைந்துள்ளது. இதில் கடந்த மாதம் 19-ம்தேதியிலிருந்து கடந்த 3-ம்தேதி இரவு 8 மணி வரை 18 வயது நிரம்பிய தகுதியுடைய 9 லட்சத்து 14 ஆயிரத்து 931 பேர் படிவம் 6, 6 ஏ அளித்தனர். இதேபோல இறந்துபோன, 13 ஆயிரத்து 457 பேரின் பெயர்களை நீக்குவதற்கு அவர்களின் குடும்பத்தினர் படிவம் 7-ம் அளித்தனர்.
தொடர்ந்து வருகிற 18-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். இந்த முகாமில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்காக சிறப்பு தீவிர முகாமை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் ஒரு வாய்ப்பை அளிக்குமா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்து அறிவிக்கும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பட்டினமருதூர் பகுதியில் மத்திய விலங்கியல் துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள் ஆய்வு
செவ்வாய் 6, ஜனவரி 2026 5:16:07 PM (IST)

சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் கண்காட்சி அரங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 6, ஜனவரி 2026 3:53:57 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு: அமைச்சர் ரகுபதி
செவ்வாய் 6, ஜனவரி 2026 3:43:11 PM (IST)

கரூா் கூட்ட நெரிசல் வழக்கில் விஜய்க்கு சிபிஐ சம்மன்: ஜன. 12 ஆஜராக உத்தரவு!
செவ்வாய் 6, ஜனவரி 2026 3:24:08 PM (IST)

திமுக அரசு மீது ரூ.4 லட்சம் கோடி ஊழல் புகார்: ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!
செவ்வாய் 6, ஜனவரி 2026 12:32:38 PM (IST)

பசுமை தாமிர ஆலை: வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி!
செவ்வாய் 6, ஜனவரி 2026 12:08:48 PM (IST)

