» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாணவர்கள் உயர்கல்வி பயில ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
வியாழன் 13, மார்ச் 2025 3:59:08 PM (IST)

இடைநிற்றல் இல்லாமல் அறிவுரைகள் வழங்கி, மாணவர்கள் உயர்கல்வி பயில ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் அறிவுறுத்தினார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், கீழப்பாட்டம் கிராம ஊராட்சி, பர்கிட் மாநகரம் PSK பொன்மஹாலில் இன்று (13.03.2025) நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் மக்கள் தொடர்பு முகாமில் 34 பயனாளிகளுக்கு ரூ.19.98 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி.ஆர்.மனோகரன் முன்னிலையில் வழங்கினார்.
இம்முகாமில் சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு துறைகளின் செயல்முறை பணிகள் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சியினை, மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார். இம்முகாமில், மொத்தம் ரூ.19.98 இலட்சம் மதிப்பில் 34 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், வழங்கினார்.
இம்முகாமில் மொத்தம் 132 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது. இதில் 69 மனுக்கள் ஏற்பு, 63 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை எளிய மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்துவகை திட்டங்களும் மக்களை தேடி சென்று வழங்க வேண்டுமென்று பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று பாளையங்கோட்டை வட்டம், கீழப்பாட்டம் கிராம ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் விவசாயம் சார்ந்த பகுதியாக இருப்பதால் விவசாயிகள் அனைவரும் மண்வளம் தன்மை குறித்து தெரிந்து கொண்டு அதற்கேற்ப விவசாய விளைப்பொருட்களை விளைவிக்க வேண்டும். விவசாயிகள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கும் பால் உற்பத்தியினை பெருக்க வேண்டும்.
ஆவின் பாலகத்திற்கு தங்களது பால் உற்பத்தியினை அதிகளவில் வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். வேளாண்மைத்துறையின் மூலம் மண்வள அட்டைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசால் கல்வி திட்டங்களில் பல்வேறு வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் குடும்ப சூழ்நிலை காரணமாக மாணவர்கள் பள்ளி இடைநிற்றல் ஏற்படுகிறது.
எனவே, பெற்றோர்கள் தங்களது மாணவர்கள் கல்வி பயில ஊக்குவிக்க வேண்டும். மேலும், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு தரமான கல்வியினை கற்பிப்பதோடு, இடைநிற்றல் இல்லாமல் அறிவுரைகள் வழங்கி, மாணவர்கள் உயர்கல்வி பயில வழிகாட்ட வேண்டும். மாணவர்களும் ஆசிரியர்களின் அறிவுரைகளை கேட்டு கல்வி பயில வேண்டும்.
பெண்கள் இளம் வயதில் சரியான ஊட்டச்சத்து இல்லாமல் கருவுற்றால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு, தாயின் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கிறது. இதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கையினை சுகாதாரத் துறையும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்துறையும் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இம்முகாமில், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முகமது ஷா, மாவட்ட மேலாளர் (தாட்கோ) பாஸ்கர், மாவட்ட சமூக நல அலுவலர் தாஜூன்னிசா பேகம், மாவட்ட சுகாதார அலுவலர் கீதா, கீழப்பாட்டம் ஊராட்சி மன்ற தலைவர் துரைச்சி, நடுவக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் தேவானை கனகராஜ், கீழப்பாட்டம் வார்டு உறுப்பினர் திருப்பதி மணிகண்டன், பாளையங்கோட்டை வட்டாட்சியர் இசைவாணி மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)

ரெட்ரோ படத்தின் வெற்றிவிழா : அகரம் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி வழங்கிய சூர்யா!
வியாழன் 8, மே 2025 11:54:49 AM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் 91.94% மாணவர்கள் தேர்ச்சி!
வியாழன் 8, மே 2025 11:29:44 AM (IST)
