» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!
வியாழன் 13, மார்ச் 2025 3:12:23 PM (IST)
தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது முந்தைய நாள், நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யும். அதேபோல, தமிழ்நாடு அரசும் நாளை(மார்ச் 14) பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளதையடுத்து இன்று(மார்ச் 13) தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். தலைமைச் செயலாளர் சண்முகம், துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர். தமிழ்நாடு அரசு பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும். தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு இதனை தயாரித்துள்ளது.
அறிக்கையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% ஆக இருக்கும் என்றும் தனி நபர் வருமானம் ரூ.2.78 லட்சமாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் தனி நபர் வருமானம், தேசிய சராசரியைவிட 1.64 மடங்கு அதிகம் என்றும் கரோனாவுக்குப் பிறகு தமிழகத்தில் சேவைத் துறைகள் மீண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)

ரெட்ரோ படத்தின் வெற்றிவிழா : அகரம் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி வழங்கிய சூர்யா!
வியாழன் 8, மே 2025 11:54:49 AM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் 91.94% மாணவர்கள் தேர்ச்சி!
வியாழன் 8, மே 2025 11:29:44 AM (IST)
