» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேசிய கல்விக் கொள்​கையை தமிழக அரசு ஒரு​போதும் ஏற்​க​வில்லை: அன்​பில் மகேஸ் விளக்​கம்

புதன் 12, மார்ச் 2025 10:44:32 AM (IST)

தேசிய கல்விக் கொள்​கையை தமிழக அரசு ஒரு​போதும் ஏற்​க​வில்லை என்று தமிழக அமைச்​சர் அன்​பில் மகேஸ் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: மத்​திய அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் தவறான தகவல்​களை பரப்​புவ​தால் உண்​மை​கள் மாறி​வி​டாது. தேசிய கல்விக் கொள்​கையை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வரு​கிறது.எங்​கள் நிலைப்​பாட்​டில் திடீர் மாற்​றம் இல்​லை. 

தமிழக அரசின் 2024 மார்ச் 15-ம் தேதி​யிட்ட கடித​மும் தேசிய கல்விக் கொள்​கையை ஏற்​ப​தாக இல்​லை. மாணவர்​களுக்கு நன்மை பயக்​கும்​போது மட்​டுமே மத்​திய அரசின் திட்​டங்​களை ஏற்​கிறோம். அதற்​காக அனைத்து திட்​டங்​களை​யும் கண்​மூடித்​தன​மாக ஏற்க முடி​யாது. அந்த கடிதத்​தில், ஒரு குழு அமைக்​கப்​பட்டு அதன்​பரிந்​துரைகளின்​படி திட்​டத்​தில் சேரு​வது குறித்து முடிவு செய்​வோம் என்று தெளி​வாகக் கூறப்​பட்​டுள்​ளது.

மேலும், தேசிய கல்விக் கொள்​கையை திணித்து தமிழகத்​தின் கலாச்​சா​ரத்​தை​யும், மரபை​யும் சிதைக்க முயற்​சிப்​பவர்​கள்​தான் தற்​போது அரசி​யல் செய்​கின்​றனர். தமிழக குழந்​தைகள் நலனுக்கு எது சிறந்​தது என்​பதை தேர்ந்​தெடுக்​கும் உரிமையை அங்​கீகரித்து ஆதரிப்​ப​தன் மூலம் நீங்​கள் தமிழகத்​தின் எதிர்​காலத்​துக்​கும் சிறந்த சேவையை செய்​கிறீர்​கள். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory