» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் : இஸ்லாமிய அமைப்பு பரபரப்பு புகார்

செவ்வாய் 11, மார்ச் 2025 10:16:37 AM (IST)

இப்தார் நிகழ்ச்சியில் விதிமுறைகளுக்கு மாறாக நடந்தது கொண்ட நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என இஸ்லாமிய அமைப்பு புகார் மனு அளித்துள்ளது.

தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பு சார்பாக ஏராளமானோர் திரண்டு வந்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை நேற்று கொடுத்தனர். அந்த அமைப்பின், பொருளாளர் சையது கவுஸ் என்பவர் புகார் மனுவில் கையெழுத்திட்டுள்ளார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 7-ந்தேதி அன்று, தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இப்தார் நிகழ்ச்சி என்பது மிகவும் கண்ணியமான நிகழ்ச்சியாகும். இது மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்கள் போன்றது அல்ல. விஜய் நடத்திய இப்தார் நிகழ்ச்சி கண்ணியமான இப்தார் நிகழ்ச்சிக்கு விரோதமாக நடத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில், இப்தார் நிகழ்ச்சி நோன்புக்கு சம்பந்தமே இல்லாத குடிகாரர்களும், ரவுடிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வந்த உண்மையாக நோன்பை கடைபிடித்தவர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் தாக்கப்பட்டனர். பவுன்சர்கள் மூலம் அடித்து, உதைத்து வெளியே தள்ளப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நடிகர் விஜய் 1½ மணி நேரத்திற்கு முன்பே வந்தது தவறாகும்.

நோன்பு திறக்கும் நேரத்திற்கு 10 நிமிடத்திற்கு முன்பாக அவர் வந்திருக்க வேண்டும். அவர் நடத்திய இப்தார் நிகழ்ச்சி, விதிமுறைகளுக்கு மாறாக நடந்ததால் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று எங்கள் அமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory