» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவுபடுத்தப்படும்: உதயநிதி ஸ்டாலின் தகவல்!

வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:07:08 PM (IST)



மகளிர் உரிமைத்தொகை திட்டம் 3 மாதங்களில் விரிவுபடுத்தப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில் இன்று 30 ஜோடிகளுக்கு திருமணம், ராஜா அண்ணாமலைபுரம் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. திருமண விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 30 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகை திட்டம் 3 மாதங்களில் விரிவுபடுத்தப்படும். தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் இன்னும் 3 மாதங்களில் விரிவுபடுத்தப்பட்டு கூடுதலாக மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory