» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு

வெள்ளி 14, பிப்ரவரி 2025 11:49:42 AM (IST)

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளை நியமித்த விஜய், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதுதவிர த.வெ.க. தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து 2 நாட்களாக பல்வேறு ஆலோசனை நடைபெற்றது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் கட்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழாவையும் சேர்த்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தை வருகிற 26-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டத்தில் 25 மாவட்டங்களுக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து கட்சி பணிகளில் மும்முரம் காட்டி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள 'Y' பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பர் என்றும் இந்த 'Y' பிரிவு பாதுகாப்பானது தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து

என்னதுFeb 14, 2025 - 09:26:28 PM | Posted IP 162.1*****

ஒழுங்கா வரி கட்டாத, விமானத்தில் பொம்பிளை கூத்தாடிகள் கூட சுற்றும் கூத்தாடிக்கு Y பிரிவு பாதுகாப்பு ஆ ?

WHY WHYFeb 14, 2025 - 12:36:50 PM | Posted IP 162.1*****

அவர் பனையூரை விட்டு வரமாட்டார்... பனையூருக்கு மட்டுமா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory