» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி, மானூர் வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் திடீர் ஆய்வு

வெள்ளி 14, பிப்ரவரி 2025 11:23:25 AM (IST)



திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் மானூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும் அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த உணவு தயாரிக்கும் கூடத்தில் முதலமைச்சரின் காலை உணவு தயாரிக்கப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், ஆய்வு மேற்கொண்டதோடு, அங்கு பணிபுரிபவர்களிடம் சமையல் செய்யும் இடம் எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டுமெனவும், அதே போன்று உணவின் தரம், சுவை குறித்து ஆய்வு செய்து, அலுவலர்கள் தொடர் ஆய்வு செய்ய வேண்டுமெனவும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக உணவு தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின் மூலம் வீடு இழந்தவர்களுக்கு, வெள்ள நிவாரண நிதி புனரமைப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.4 இலட்சம் செலவில் மானூர் ஊராட்சி ஒன்றியம் குப்பக்குறிச்சி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 6 பயனாளிகளின் வீடுகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.43 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி செயலக கட்டடத்தினையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், கங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், பதிவேடுகள், மருந்துகளின் இருப்புகள் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்நிகழ்வில், உதவி திட்ட அலுவலர் (ஊரக வேலைவாய்ப்பு) இசக்கியப்பன், மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீகாந்த், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory