» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தி.மு.க. நெல்லை மாவட்ட செயலாளர் திடீர் மாற்றம்: புதிய பொறுப்பாளர் நியமனம்!

வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:23:30 AM (IST)

நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் மைதீன்கான் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக அப்துல் வகாப் எம்.எல்.ஏ. புதிய பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் "திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் டி.ஜெ.எஸ்.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ. அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக வல்லூர் டாக்டர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் அண்ணாதுரை எம்.எல்.ஏ. அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக பட்டுக்கோட்டை ஆலடிக்குமுலை தாமரைக்குடிகாடு பகுதியை சேர்ந்த பழனிவேல் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

நீலகிரி மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் பா.மு.முபாரக் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக கோத்தகிரி நெடுகுளா பகுதியை சேர்ந்த கே.எம்.ராஜூ நியமிக்கப்படுகிறார்.

நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வரும் மைதீன்கான் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக பேட்டை எம்.ஜி.பி. சன்னதி தெருவை சேர்ந்த அப்துல் வகாப் எம்.எல்.ஏ. புதிய பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory