» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாநிலங்களவை உறுப்பினர் பதவி விவகாரம் : கமல்ஹாசனுடன் உதயநிதி சந்திப்பு!

வியாழன் 13, பிப்ரவரி 2025 5:53:38 PM (IST)



மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை அவரது இல்லத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று(பிப். 13) சந்தித்துப் பேசியுள்ளார்.

மக்களவைத் தோ்தலின்போது திமுக கூட்டணியில் மநீம இடம்பெற்றது. அப்போது, மநீமவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் அளிக்கப்படும் என திமுக சாா்பில் உறுதி அளிக்கப்பட்டது. விரைவில் தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், சென்னையில் ஆழ்வாா்பேட்டையில் உள்ள மநீம அலுவலகத்தில் கமல்ஹாசனை பி.கே.சேகா்பாபு நேற்று சந்தித்தாா். இந்தச் சந்திப்பு 20 நிமிஷங்களுக்கு மேலாக நீடித்தது. மநீம பொதுச்செயலா் அருணாசலமும் உடனிருந்தாா்.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரிலேயே கமல்ஹாசனை பி.கே.சேகா்பாபு சந்தித்துப் பேசியுள்ளாா். மாநிலங்களவை இடம் தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று கமல்ஹாசன் - உதயநிதி சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி உதயநிதி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் - கலைஞானி கமல்ஹாசன் சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory