» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக வெற்றிக் கழகத்திற்கு 20% வாக்குகள் உள்ளது: பிரசாந்த் கிஷோர் தகவல்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:27:46 PM (IST)

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 15% முதல் 20% வரை வாக்கு சதவீதம் கிடைக்கும் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ஐபேக் எனும் நிறுவனம் மூலம் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு வெற்றிக்கான வியூகம் வகுத்துக் கொடுத்தார் பிரசாந்த் கிஷோர். கடந்த 2021 ஆம் ஆண்டு கடைசியாக திமுகவுக்கு வியூகம் வகுத்துக் கொடுத்த ஐபேக் நிறுவனம் அதன் பிறகு எந்த கட்சிக்கும் வியூகம் வகுக்கவில்லை. இந்நிலையில் நேற்றைய தினம் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டிற்கு வந்த பிரசாந்த் கிஷோர், அங்கு அவருடன் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியிருந்தார்.
இந்த நிலையில் தவெக குறித்து ஆய்வறிக்கையை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் பிரசாந்த் கிஷோர் இன்று கொடுத்தார். அதில் தமிழகத்தில் தவெகவுக்கு 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பு அதிக வாக்குகளை பெற தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டன. மேலும் எந்த பகுதியில் தவெகவுக்கு அதிக வாக்குகள் உள்ளன என்பது குறித்து ஆனந்துடன் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை ஜாஹிர் உசேன் கொலை வழக்கு: குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்!
புதன் 19, மார்ச் 2025 5:01:36 PM (IST)

நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை : காவல்துறை அதிகாரிகள் 2பேர் சஸ்பெண்ட்
புதன் 19, மார்ச் 2025 4:57:26 PM (IST)

நெல்லை ஜாஹிர் உசேன் கொலையில் யாரும் தப்ப முடியாது : முதல்வர் ஸ்டாலின் உறுதி!
புதன் 19, மார்ச் 2025 4:34:05 PM (IST)

தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்? - தமிழக வெற்றிக்கழகம் விளக்கம்
புதன் 19, மார்ச் 2025 10:29:04 AM (IST)

கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி ஆக்கி வீரர் உள்பட 2 பேர் பலி: நெல்லையில் பரிதாபம்
புதன் 19, மார்ச் 2025 8:35:58 AM (IST)

நெல்லை மாவட்ட முதல் பெண் தீயணைப்பு அதிகாரி பதவி ஏற்பு: அலுவலர்கள், வீரர்கள் வாழ்த்து
புதன் 19, மார்ச் 2025 8:33:23 AM (IST)

JAY FANSFeb 12, 2025 - 03:13:54 PM | Posted IP 162.1*****