» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)
தமிழ்நாடு விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், கரியமங்கலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது ஓஎன்ஜிசி நிறுவன சொத்துக்களை சேதப்படுத்தியதாக தமிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 24 பேருக்கு எதிராக காவல் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த திருவாரூர் நீதிமன்றம், பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜுக்கு தலா 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்ற 22 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து, தங்களுக்கு பிணை வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தனர். இந்நிலையில் பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதை அடுத்து பி.ஆர்.பாண்டியன் பிணையில் வெளிவருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)

பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:24:37 PM (IST)

வாக்குறுதியை காப்பாற்றாமல் செவிலியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:54:00 AM (IST)


.gif)