» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெண்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க சட்ட திருத்த மசோதா : முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்
வெள்ளி 10, ஜனவரி 2025 3:43:54 PM (IST)

பெண்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க சட்ட திருத்த மசோதாவை தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களில் மரணமடையும் வரை சிறையிலேயே இருக்கும் வகையில் தண்டனையை அதிகரிக்கும், 2025 குற்றவியல் திருத்தச் சட்ட முன்வடிவை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை, பிணையில் விடுவிக்காதபடி சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படுகிறது என்றார்.
மேலும், பெண்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க, தண்டனைகள் கடுமையாக்கப்படும். பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிகபட்சமாக ஆயுள்காலம் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால், ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்க சட்ட திருத்தம் வகை செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்க மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சட்டங்களையும் தண்டனையையும் கடுமையாக்கும் மசோதாவை தமிழக அரசு கொணடு வந்துள்ளது.
மேலும், குறிப்பிட்ட சில குற்றங்களில் வழக்குப் பதிவு செய்யப்படும்போது, பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால், அதில் தொடர்புடையவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கூறினார். இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார். இதையடுத்து மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

உயர்கல்வித்துறை அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: டிடிவி தினகரன்
வெள்ளி 11, ஜூலை 2025 12:27:27 PM (IST)

புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி
வெள்ளி 11, ஜூலை 2025 12:17:16 PM (IST)

அங்கன்வாடிகள் மூடப்படும் என்பது தவறான தகவல்: அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்
வெள்ளி 11, ஜூலை 2025 11:59:39 AM (IST)

சூடுபிடிக்கும் தேர்தளம் களம்: 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
வெள்ளி 11, ஜூலை 2025 11:16:32 AM (IST)

அன்புமணி எனது பெயரை பயன்படுத்த கூடாது: ராமதாஸ் அதிரடி!
வெள்ளி 11, ஜூலை 2025 11:02:01 AM (IST)
