» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி சரகத்தில் 477 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது: டிஐஜி மூர்த்தி பேட்டி

வியாழன் 9, ஜனவரி 2025 12:59:31 PM (IST)



திருநெல்வேலி சரகத்தில் 477 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல்துறை ஆலோசனைக் கூட்டத்தில் நெல்லை சரக டிஐஜி மூர்த்தி தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,  திருநெல்வேலி காவல் சரகம் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி, 22 காவல் உட்கோட்டங்களுடன் இயங்கி வருகிறது. 145 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 21 மகளிர் காவல் நிலையங்கள், 12 போக்குவரத்துக் காவல் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு காவல் அலகுகளைக் கொண்டு, 805 காவல் அலுவலர்களையும், 7766 காவலர்களையும் ஆக மொத்தம் 8,571 பேருடன் இயங்கி வரும் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காவல் சரகம் இதுவாகும்.

எதிர்கொள்ளும் சவால்கள்:

• சாதிச் சண்டைகள், பழிக்குபழியான கொலைகள், ரவுடிகளின் தாக்குதல் என பல்வேறு சட்டம் ஒழுங்குப் பிரச்சகனைகளைக் கையாள வேண்டிய இச்சரகத்தில், 52 கொலையுண்டவர்களின் நினைவு தினங்கள் ஒவ்வொறு ஆண்டும் அனுசரிக்கப்படுகின்றன.

• அது தவிரவும் பசும்பொன் தேவர் குரு பூஜை, தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் தினம், பூலித்தேவன் நினைவு தினம், அழகுமுத்துக்கோன் நினைவு தினம், கட்டபொம்மன் நினைவு தினம் என பல்வேறு தலைவர்களின் 16 நினைவு/பிறந்த தினங்கள் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகின்றன. இந்நிகழ்வுகள் நடக்கும்போது சரகக் காவல் துறை முழுமையாக அனைத்து காவலர்களை ஒன்று திரட்டி அவற்றை கவனமுடன் கையாள வேண்டியிருக்கிறது.

• தென்காசி மாவட்டத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும், நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களின் பாதுகாப்புகள் யாவும் பெருந்திரள் காவலர்களைக் கொண்டு செய்ய வேண்டியவையாக இருக்கின்றன.

• இலட்சக் கணக்கான மக்கள் ஒரே நாளில் திரளும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழா, திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா உள்ளிட்ட சரகத்தின் பல்வேறு திருவிழாக்கள், கொடை விழாக்கள் யாவும் ஆயிரக்கணக்கான காவலர்களை நியமித்து பாதுகாப்புத்தர வேண்டியவையாக உள்ளன.

• சாதிச் சண்டைகளைத் தவிர்க்கும் பொருட்டும், பழிக்குப் பழி வாங்க நேரிடும் நிகழ்வுகளைக் தடுக்கும் பொருட்டும், அம்பை முதல் தொடங்கி ஏரல் வரைக்கும் தாமிரபரணி ஆற்றின் இருகரைப் பகுதிகளிலும், ஏனைய பிரச்சனைக் குரிய இடங்களிலும் ஆண்டு முழுவதும் 2477 காவல் பீட்கள் போடப்பட வேண்டிய சூழல் இருந்து வரும் சரகம் இதுவாகும்.

• அதுபோலவே, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், சாதிகளின் பெயரால் மாணவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.

-2024 ஆம் ஆண்டின் நற்செயல்கள்:

இத்தனை சவால்கள் நிறைந்த திருநெல்வேலி காவல் சரகத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டில் காவல் காவல் துறையினரால் செய்யப்பட்ட நற்செயல்களாவன:

• சாதியக் கொலைகள், ரவுடிகள் கொலைகள் எதுவும் நடைபெறவில்லை.

• வரதட்சனை மரணம் ஏதும் நிகழவில்லை.

• 477 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது.

• 4305 பேர் மீது தடுப்புச் சட்டப் பரிவுகளின்படி நடவடிக்கை.

• ரவுடிப் பட்டியலில் இருக்கும் 25 பேருக்கு நீதிமன்ற கடுங்காவல் தண்டனை.

• கொலை தண்டனை. வழக்குகளில் ஈடுபட்ட 52 பேருக்கு நீதிமன்ற கடுங்காவல்

• 61 போக்சோ குற்றவாளிகளுக்கு நீதிமன்ற தண்டனை.

• 316 கிலோ கஞ்சா பறிமுதல்.

• 14331 கிலோ குட்கா பறிமுதல்.

• குற்றத் தடுப்புக்காக 7731 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்.

• பல இலட்சம் பேர் கலந்து கொண்ட குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவும், திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவும் எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றியும் பொதுமக்கள் சிறப்பாக வழிபட தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு.

• சரகம் முழுவதும் நிறுவப்பட்டிருந்த 2440 விநாயகர் சிலைகளை 43 ஊர் வலங்கள் மூலம் எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனையுமின்றி கரைக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடு.

• பசும்பொன் தேவர் குருபூஜை, தியாகி இம்மானுவேல் சேகரன் உள்ளிட்ட அனைத்து ஆண்டு தின நிகழ்வுகளில், எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாத பாதுகாப்பு ஏற்பாடு.

• மாண்புமிகு பாரத பிரதமர், மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் ஆகியோர் வருகைதந்த போதெல்லாம் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு.

சிறப்பு நற்செயல்:

• போதைப் பொருளுக்கு எதிராக மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணைப்படி "போதையில்லா தமிழ்நாடு" எனும் நற்செயல் முன்னெடுப்பு.

• கல்வி நிலையங்களில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, போதைப்பொருள் "எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம்" என்ற விழிப்புணர்வு.

நான்கு மாவட்டங்களிலுள்ள 268 15.10.2024 அன்று நடத்தப்பட்ட ஆய்வரங்கம். கல்லூரிகளின் பொறுப்பாளர்களுடன் போதைப் பொருள் விழிப்புணர்வு

• சரகத்தின் நான்கு மாவட்டங்களிலும் தனித்தனியாக 268 கல்லூரிகளிலும் "போதை தடுப்பு விழிப்புணர்வு குழுக்கள்" அமைப்பு. அதன் பொறுப்பாளர்களான மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கு சம்பந்தப்பட்ட விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கான 4 மாவட்டங்களில் தனித்தனியாக பயிற்சி பட்டறைகள்.

காவலர்களை ஊக்கப்படுத்துதல்:

• கடந்த 11.08.2024 அன்று பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு வாரத்தில் திருநெல்வேலி சரகத்திலுள்ள நான்கு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம்- செய்து, காவல் கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோரைச் வழிகாட்டுதல்களும் வழங்கியது. காவல் உதவி/துணைக் சந்தித்து அறிவுரைகளும்,

• அடுத்த 15 நாட்களுக்குள் சரகத்திலுள்ள அனைத்து 22 காவல் உட்கோட்ட அலுவலகங்களுக்கும் நேரடியாகச் சென்று அங்கு காவல் ஆய்வாளர்களையும், சார்பு ஆய்வாளர்களையும் சந்தித்து அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கியது.

• கடந்த ஆகஸ்ட்டு முதல் டிசம்பர் வரை 5 மாதங்களுக்குள் சரகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 59 காவல் நிலையங்கள்/ அலகுகளில் ஆய்வுகளும், 41 காவல் நிலையங்களைப் பார்வையும் இட்டது.
● அங்கு பணியில் இருந்த காவலர்கள், அலுவலர்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்களின் பணித்திறனைப் பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்தியது.

• மாதந்தோறும் நடைபெறும் காவல் ஆய்வுக் கூட்டங்களில், நற்பணி புரிந்த 180 காவல் அலுவலர்கள்/ காவலர்களுக்கு நற்சான்று வழங்கிப் பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்தியது.

2025 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகள்:

• சாதீயக் கொலைகள், ரவுடி கொலைகள். கொலைகளை முற்றிலுமாக தடுத்தல். பழிக்குப்பழி வாங்கும்
• சாதீய வெறியைத் தூண்டுபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுத்தல்.

• பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் சாதீய தலைகாட்டவிடாமல் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துதல். எண்ணங்கள்

• பட்டியலிடப்பட்ட ரவுடிகளையும், புதிதாகக் கிளைத்துவரும் ரவுடிகளையும் நெருக்கமாகக் கண்காணித்து தீவிரமான சட்ட நடவடிக்கை எடுத்தல்.

• பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முழுமையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

• சாதி சம்பந்தப்பட்ட வழக்குக் குற்றவாளிகள், போக்சோ குற்றவாளிகள், ரவுடிகள் ஆகியோர் மீது நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகளை தனிப்பட்ட சிறப்புக் குழுக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து நீதிமன்றம் மூலம் அதிகபட்சத் தண்டனை பெற்றுத் தருதல்.

• நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் முதலியவற்றில் பாதுகாப்பைப் பலப்படுத்தி அங்கு குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுத்தல்.

• மாநில எல்லைச் சோதனைச் சாவடிகளைப் பலப்படுத்தி, அண்டை மாநிலங்களில் இருந்து கழிவுகள் கொண்டு வருவதை தடுத்து, அவ்வாறு செய்பவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்தல்.

• சாலை விதிகளை முறையாக அமல்படுத்தி, சாலை விபத்துக்களை மிகையாகக் குறைத்தல்.

• குற்றத் தடுப்புக்குப் பயன்படும் CCTV கேமராக்களை அனைத்துப் பகுதிகளிலும் அமைத்தல்.

• காவலர் நலம் பேறும் திட்டங்கள் யாவும் அவர்களுக்கு முறையாக சென்று சேர்வதை உறுதி செய்தல்.

சென்ற ஆண்டில் திருநெல்வேலி சரகக் காவல் துறை சிறப்பாக செயல்பட ஒத்துழைத்த நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும், மாவட்ட காவல் துறையினருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory