» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேர்தல் நடத்தை விதிகள் எதிரொலி: ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு விநியோகம் ரத்து!
வியாழன் 9, ஜனவரி 2025 12:33:12 PM (IST)
தேர்தல் நடத்தை விதிகள் எதிரொலியாக ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படவில்லை.
ஈரோடு கிழக்கில் மட்டும் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க அனுமதி கோரியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது