» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை வாபஸ் : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

புதன் 8, ஜனவரி 2025 3:44:05 PM (IST)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று அதிமுக உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

ஆளுநர் உரையின்போது பேரவையில் பதாகைகளுடன் வந்த அதிமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று சபாநாயகர் அப்பாவு-விடம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பதிலளித்து பேசிய சபாநாயகர் அப்பாவு,

ஆளுநர் உரையன்று நடந்தவற்றை எவறாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆளுநர் உரையன்று உரிமை மீறலில் ஈடுபட்டோர் மீது உரிய விசாரணை நடத்தப்படும். இப்பிரச்சினையானது அவை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,

விதிகளை மீறிய அதிமுகவினர் மீது என்ன நடவடிக்கை? என நான் கேட்டதை ஏற்று, உரிமை மீறல் குழு விசாரிக்கும் என நீங்கள் ஒரு தீர்ப்பு அளித்துள்ளீர்கள். எனினும், இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என உறுதியளித்தால் நடவடிக்கையை திரும்ப பெறலாம் என்று பேசினார். இதனையடுத்து அதிமுகவினர் மீதான நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory