» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை: திருவண்ணாமலையில் பரபரப்பு!

சனி 28, டிசம்பர் 2024 5:09:51 PM (IST)

திருவண்ணாமலையில் ஆன்மிக பயணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து ததற்கொலை செய்துகொண்டனர்.

திருவண்ணாமலைக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆன்மிக பயணமாக வந்தனர். அவர்கள் கிரிவலப்பாதையில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி இருந்தனர். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வெளியே வராததால், அங்கு வேலை செய்த பணியாளர்கள் சந்தேகமடைந்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் அங்கு வந்த போலீசார், கதவை திறந்து பார்த்தபோது 4 பேரும் இறந்து கிடந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்து டைரி ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில், நாங்கள் இறைவனிடம் செல்கிறோம் என எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த யாசர் (45), அவரது மனைவி பிரியா(40), இவர்களது மகள் ஜலந்தரி மற்றும் மகன் ஆகாஷ்குமார் என்பது தெரியவந்தது. 4 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory