» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும் : கனிமொழி எம்பி பேச்சு

சனி 28, டிசம்பர் 2024 4:53:55 PM (IST)



திமுக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும் என்று கனிமொழி எம்பி கூறினார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஆர்த்தி மஹாலில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஆய்க்குடி அமர் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கனிமொழி எம்பி பரிசுகள் வழங்கி, விழாவில் சிறப்புரையாற்றினார்.

விழாவில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: மாற்றுத்திறன் படைத்த ஒவ்வொருவருக்கும் தனித் திறமைகள் உண்டு என்பதை உணர்ந்துதான் மாற்றுத்திறனாளிகள் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் பெயர் சூட்டினார். அது மட்டுமல்ல மாற்றுத் திறனாளிகளுக்கு என்று ஒரு துறையை உருவாக்கி, அந்தத் துறையை அவர் கையில் வைத்துக் கொண்டார்.  

அதேபோன்று தான், திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மாற்றுத்திறனாளி துறையைத் தனது கையில் வைத்துக்கொண்டு அவர்கள் கேட்கும் அனைத்து உதவிகளையும், பல்வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகள் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக அரசு நிறைவேற்றி வருகிறது. திமுகவும், திமுக அரசும் மாற்றுத்திறனாளிகளுக்கு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

விழாவில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அமர் சேவா சங்க செயலாளர் சங்கரநாராயணன், நகர் மன்றத் தலைவர் கருணாநிதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

ThiruDec 29, 2024 - 09:54:05 AM | Posted IP 162.1*****

கடந்த மூன்று ஆண்டுகளாக உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தில் (TN-RIGHTS Project) நூறு கோடிக்கு மேல் செலவாகியும், ஒரு மாற்றுத் திறனாளி கூட இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறவில்லை என்ற உண்மை அக்கா கனிமொழி அவர்களுக்கு தெரியுமா?என்று தெரியவில்லை. இதன் வெள்ளை அறிக்கையை வெளியிடுவார்களா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory