» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
திங்கள் 2, டிசம்பர் 2024 4:38:39 PM (IST)
விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நல வாழ்வு மையங்களில் காலியாக உள்ள மருந்தாளுநர்கள், துணை சுகாதார செவிலியர், இயன்முறை மருத்துவர் மற்றும் நுண்கதிர் வீச்சாளார் ஆகிய பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பங்கள் http://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ 12.12.2024 பிற்பகல் 5.45 மணி வரை சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு https://virudhunagar.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.