» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நடிகர் டெல்லி கணேஷ் மறைவு: முதல்வர் ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம், ரஜினி இரங்கல்
ஞாயிறு 10, நவம்பர் 2024 6:20:00 PM (IST)
மூத்த நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் டெல்லி கணேஷ் பல தொடர்களில் நடித்து முத்திரை பதித்திருப்பதாக’’ புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ் திரைத்துறை வரலாற்றில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் பல நகைச்சுவை, குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவரான அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு என்றும் கூறியுள்ளார்.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்திய விமானப் படையில் பணியாற்றியவரும், நாடக நடிகராக கலைத் துறையில் அடியெடுத்து வைத்து, ஏராளமான திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து மக்களின் அன்பைப் பெற்றவரும், தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றவரும், 1994-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக் காலத்தில் "கலைமாமணி" விருது பெற்றவருமான டெல்லி கணேஷ் அவர்கள் வயது முதிர்வு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் என அனைத்துக் கதாபாத்திரங்களிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் டெல்லி கணேஷ் அவர்கள். அவருடைய இழப்பு திரைப்படைத் துறைக்கு பேரிழப்பாகும்.
டெல்லி கணேஷ் அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், ரசிகப் பெருமக்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், "நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர்” என்றும், "அற்புதமான நடிகர்” எனவும் தெரிவித்துள்ளார். அவருடைய மறைவு செய்தி கேட்டு தான் மனம் வருந்துவதாகவும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தன்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளத்துக் அவரது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், "மூத்த நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி, வேதனை அளிக்கிறது.