» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் வார்டு வார்டாக குறைதீர்க்கும் முகாம் : மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு
புதன் 6, நவம்பர் 2024 12:57:34 PM (IST)

தூத்துக்குடியில் அனைத்து வார்டுகளுக்கும் சென்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் முகாமை துவக்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வாரம் தோறும் பொதுமக்களின் கோாிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
கடந்த வாரம் நடைபெற்ற முகாமில் 45 மனுக்கள் பெறப்பட்டதில் 37 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் விசாரணையில் உள்ளது விரைவில். மேலும், 6 கிலோ மீட்டர் தூரம் உள்ள பக்கிள் ஓடையில் அமலை செடிகள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் அகற்றி முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் தடை இல்லாமல் மழை நீர் கடலுக்குள் சென்று விடும்.
மேலும், தூத்துக்குடியில் ரோடுகள் வசதிகள் கேட்டு மக்கள் அதிக அளவில் மனுக்களை அளித்து வருகிறார்கள். விரைவில் அனைத்து பகுதிகளிலும் ரோடு வசதிகள் செய்து கொடுக்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் சென்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும் என்றார். அதன்பின்பு மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் மண்டல ஆணையர் சுரேஷ்குமார், உதவி செயற் பொறியாளர்கள் ராமகிருஷ்ணன், முனிர் அகமது, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் ரெங்கசாமி, ஜெயசீலி, காந்தி மணி, கற்பக கனி, சுப்புலட்சுமி, பவானி, நாகேஸ்வரி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் ஆணையரின் நேர்முக உதவியாளர் துரை மணி உள்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புரட்டாசி சனிக்கிழமைகளில் நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

புதிய கல்குவாரிக்கு அனுமதி அளிக்க எதிர்ப்பு : இருதரப்பினர் வாக்குவாதம்!
புதன் 17, செப்டம்பர் 2025 8:24:51 AM (IST)

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி : நெல்லை சரக டிஐஜி முதலிடம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:10:00 PM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)
