» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை பணிகளின் தரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!!

சனி 20, டிசம்பர் 2025 9:20:36 PM (IST)



திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை பணிகளின் தரம் குறித்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாவட்டம், கொங்கந்தான்பாறை பகுதியில் இன்று (20.12.2025) நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கு புறவழிச்சாலை பணியானது முதற்கட்டமாக சுத்தமல்லி முதல் தொடங்கி கொங்கந்தான்பாறை வரை நடைபெற்று வருவதையும், சாலையின் தரம் குறித்தும், மூலப்பொருட்கள் மற்றும் சாலையின் அளவு குறித்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். 

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் திருநெல்வேலியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் மேற்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டுமென்ற நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்ற வேண்டுமென்பதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலையினை ராஜபாளையம்-சங்கரன்கோவில் சாலையினையும், திருநெல்வேலி-செங்கோட்டை சாலையினையும், திருநெல்வேலி- பொட்டல் புதூர் சாலையினையும், பாளையங்கோட்டை-அம்பாசமுத்திரம்-குற்றாலம் சாலையினையும் இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டார்கள். 

இப்புறவழிச்சாலையினால் திருநெல்வேலி நகருக்குள் வரும் அதிகமான போக்குவரத்து பிரிந்து திருநெல்வேலி நகருக்குள் வரும் வாகனப்போக்குவரத்து வெகுவாக குறையும் இதனால் திருநெல்வேலி நகர் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் பயன் உள்ளதாக அமையும் வகையில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

மேற்கு புறவழிச்சாலையானது மொத்தம் 32 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்படவுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் 2 சாலைகள் சந்திப்பும், மாநில சாலைகள் 2 சந்திப்பும் வருகிறது. இந்த மேற்கு புறவழிச்சாலை பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட பணிகள் சுத்தமல்லி முதல் தொடங்கி கொங்கந்தான்பாறை வரை 12 கி.மீ நீளத்திற்கு ரூ.180 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 8 கி.மீ நீளத்திற்கு தார் தளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 4 கி.மீ நீளத்திற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 2 உயர்மட்ட பாலங்கள், 2 சிறு பாலங்கள், 44 பெட்டி பாலங்கள் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. 
 
தமிழ்நாடு முதலமைச்சர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாலை வருகை தரவுள்ளார்கள். இந்த இடைப்பட்ட நேரத்திற்குள் எனவே, மேற்கு புறவழிச்சாலைகள் தரமானதாக போடப்பட்டுள்ளதா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சாலைகள் தரமானதாக போடப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 கி.மீ நீளத்திற்கான சாலை பணிகளை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்தக்காலத்திற்கு முன்பாக முடித்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாம் கட்டமாக தாழையூத்து முதல் சுத்தமல்லி வரை 20 கி.மீ நீளத்திற்கு ரூ.320 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் நிர்வாக அனுமதி பெறப்பட்டு பணிகள் துவங்கப்படவுள்ளது. நில எடுப்பு பணிகள் ரூ.80 கோடி மதிப்பிற்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு, 98% நில எடுப்பு பணிகள் முடிவுற்றுள்ளது என பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். 

அதனைத்தொடர்ந்து, ரூ.6.75 கோடி மதிப்பில் வண்ணாரப்பேட்டை தாமிரபரணி ஆற்றின் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தினை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், கண்காணிப்பு பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) ரமேஷ் , கோட்டப்பொறியாளர்கள் லிங்குசாமி (நெடுஞ்சாலை –திட்டங்கள்) திருவேங்கடராமலிங்கம் (தரக்கட்டுப்பாடு திருநெல்வேலி), சுந்தர் சிங் (சாலைபாதுகாப்பு) உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory