» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் செப். 14 ல் தேசிய மக்கள் நீதிமன்றம்

சனி 7, செப்டம்பர் 2024 11:37:02 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற 14 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2024ஆம் ஆண்டில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை வருகிற 14 ஆம் தேதி வட்ட நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினால் 9 வட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், குடும்ப வழக்குகள் உள்ளிட்டவையும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்குகளாகிய வங்கிக் கடன் வழக்குகள் அனைத்தும் சமரச பேச்சுவார்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்படும். திருநெல்வேலியில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை இம் மாதம் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

வணக்கம் தமிழகம்Sep 12, 2024 - 03:42:41 PM | Posted IP 172.7*****

தூத்துக்குடி யில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் நாள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory