» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஐடிஐயில் பயின்று சான்றிதழ் பெறாதவர்கள் டிச.31-க்குள் பெறலாம்

சனி 7, செப்டம்பர் 2024 11:35:09 AM (IST)

ஐடிஐயில் பயின்று இதுவரை சான்றிதழ் பெறாதவர்கள் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என பேட்டை ஐடிஐ துணை இயக்குநர் ஆர்.கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 1960 முதல் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களின் தேசிய தொழில் சான்றிதழ்கள் மற்றும் 2013 முதல் 2017 வரை பருவமுறை மதிப்பெண் சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் பெறப்படாமல் உள்ளன. எனவே வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் ஐடிஐக்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.

நீண்ட காலமாக இச்சான்றிதழ்கள் உள்ளதால் குறிப்பிட்ட தேதிக்குள் பெறப்படவில்லையெனில் அரசு ஆவண காப்பகத்தில் ஒப்படைக்கப்படும். அதற்கு பின்பு சான்றிதழ் வேண்டி வருபவர்கள் அரசு ஆவண காப்பகத்திற்கு நேரில் சென்று சான்றிதழ் பெறும் நிலை ஏற்படும். எனவே, உடனடியாக சான்றிதழ் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory