» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தாம்பரம்-கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் : திருச்சி, செங்கோட்டை வழியாக இயக்கம்
செவ்வாய் 3, செப்டம்பர் 2024 12:38:08 PM (IST)
தாம்பரம்-கொச்சுவேலி இடையே திருச்சி, விருதுநகர், செங்கோட்டை, கொல்லம் வழியாக வாரம் இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தாம்பரத்தில் இருந்து வருகிற 6-ஆம் தேதி, 8-ஆம் தேதி, 13-ஆம் தேதி, 15-ஆம் தேதி, 20-ஆம் தேதி, 22-ஆம் தேதி ஆகிய நாட்களில் (வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06035) திருச்சிக்கு நள்ளிரவு 12.20 மணிக்கு வந்து 12.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பகல் 11 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும்.
அதுபோல் மறுமார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து வருகிற 7-ஆம் தேதி, 9-ஆம் தேதி, 14-ஆம் தேதி, 16-ஆம் தேதி, 21-ஆம் தேதி, 23-ஆம் தேதி ஆகிய நாட்களில் (சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை) மாலை 3.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06036) திருச்சிக்கு நள்ளிரவு 1.45 மணிக்கு வந்து 1.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.35 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.
திருச்சி, விருதுநகர், செங்கோட்டை, கொல்லம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 14 மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பெட்டிகள் மற்றும் 2 முன்பதிவு இல்லாத பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயில் வாரம் இருமுறை இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.