» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

என்னுடைய அரசியலை சமாளிக்க முடியாமல் வழக்கு தொடுக்கிறார்கள் : சீமான் பேட்டி!

ஞாயிறு 1, செப்டம்பர் 2024 7:30:57 PM (IST)



"என்னுடைய அரசியலை சமாளிக்க முடியாத காரணத்தால் என் மீது ஏதாவது ஒரு வழக்கை தொடுத்து வருகின்றனர்" என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் "பைபிள், கந்த சஷ்டி கவசம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் சண்டாளன் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்த வார்த்தையை கூறியதற்காக என் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது அநியாயம். நானே ஒரு தாழ்த்தப்பட்டவன் என் மீது ஏன் வழக்கு தொடுத்துள்ளனர். 

என்னுடைய அரசியலை சமாளிக்க முடியாத காரணத்தால் என் மீது ஏதாவது ஒரு வழக்கை தொடுத்து வருகின்றனர். விளையாட்டில் ஆர்வம் இருந்தும் விளையாட வாய்ப்பு இல்லாத சிற்றூர்கள் மற்றும் கிராமங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு கைப்பந்து, கால்பந்து, ஈட்டு எரிதல் போன்ற பயிற்சிகள் கொடுத்து உரிய போட்டிகளை நடத்த வேண்டும்.

மேல் தட்டு மக்களுக்கான இந்த பார்முலா கார் பந்தயம் தேவையற்றது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் இந்த கார் பந்தயத்தில் எங்கு பார்த்தாலும் மது விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது.
 
பதவி பண திமிரில் திமுக அரசு இந்த பந்தயத்தை நடத்துகிறது இது அநியாயம். கார் பந்தயம் நடக்கும் இடத்தின் அருகே உள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை மாற்றி அமையுங்கள், சித்தலமடைந்துள்ள ஆயிரகாணக்காண பள்ளிக்கூடங்கள் , மேற்கூரைகள் இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் படித்து வருகின்றனர். 300 பெண்கள் படிக்கக்கூடிய பள்ளியில் இரண்டு கழிப்பறை மட்டும் உள்ளது இதையெல்லாம் சீரமைக்க வேண்டும்.

தமிழக முதலமைச்சர்கள் இதற்கு முன் எத்தனை முறை வெளிநாடு சென்றுள்ளனர். 10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது 30,000 பேருக்கு வேலை என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கூறினார். இந்த முதலீடாவது ஈர்க்கப்பட்டதா? இதற்கு முன்பு ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றார் இப்போது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் ஏதாவது தமிழகத்திற்கு வந்துள்ளதா? 

தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரிப்பது தான் பாலியல் சீன்டலுக்கு காரணமாக அமைகிறது. மாத்திரை, ஊசி உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக பாலியல் சீன்டல்களும் அதிகமாக நடைபெறுகிறது என்று அவர் குற்றம் சாட்டிய அவர்.. போதைப் பொருட்கள் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory