» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக ராமகிருஷ்ணன் பதவியேற்பு!
சனி 10, ஆகஸ்ட் 2024 12:48:22 PM (IST)
நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக ராமகிருஷ்ணன் இன்று பதவியேற்றார்.
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த பி.எம்.சரவணனுக்கும், தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் கடந்த 5-ந்தேதி நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் மேயர் பதவிக்கு 25-வது வார்டு கவுன்சிலர் ராமகிருஷ்ணன் என்ற கிட்டு போட்டியிட்டார்.அவரை எதிர்த்து தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பாளையங்கோட்டை 6-வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 54 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இதில் ராமகிருஷ்ணன் 30 வாக்குகளும், பவுல்ராஜ் 23 வாக்குகளும் பெற்றனா். ஒரு வாக்கு செல்லாத வாக்காகி விட்டது. இதன் மூலம் 7 வாக்குகள் வித்தியாசத்தில் மேயர் தேர்தலில் ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக ராமகிருஷ்ணன் இன்று பதவியேற்றார். ராஜாஜி மண்டபத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)

பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:24:37 PM (IST)


.gif)