» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு பள்ளியில் ஆசிரியர்களை அரிவாளைக் காட்டி மிரட்டிய 3 மாணவர்கள் கைது!
வெள்ளி 9, ஆகஸ்ட் 2024 10:28:31 AM (IST)
நாங்குநேரி அரசு பள்ளியில் அரிவாளைக் காட்டி ஆசிரியர்களை மிரட்டிய மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 நெல்லை மாவட்டம் நாங்குநேரி சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். சம்பவத்தன்று பள்ளி வகுப்பறையில் சில மாணவர்கள் பெஞ்சுகளை கைகளால் தட்டி சக மாணவர்களுக்கு இடையூறு செய்ததாகவும், மாணவிகளை கேலி-கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. 
 இதனைப் பார்த்த ஆசிரியர்கள் அந்த மாணவர்களை கண்டித்து எச்சரித்தனர். அப்போது ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் புத்தகப் பைகளில் மறைத்து வைத்திருந்த சிறிய அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து காண்பித்து ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர். 
 இதுகுறித்து நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் புகார் மனு அளித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், 7 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை நெல்லை இளைஞர் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தினர். இதில் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.  மற்ற 4 மாணவர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை கூறி பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர். 
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி சி.எஸ்.ஐ. மிஷன் மருத்துவமனையில் திருமண்டல மேலாளர் தேவா காபிரியேல் ஆய்வு
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:11:26 PM (IST)

பனைமரம் நமது மாநிலத்திற்கு உரிய சிறப்புமிக்க மரம் : ஆட்சியர் க.இளம்பகவத் பேச்சு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:06:56 PM (IST)

பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:06:57 PM (IST)

பிரதமர் கூறியது முழுக்க முழுக்க உண்மை: முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 12:50:13 PM (IST)

ஓடும் ரயிலில் செல்போன் விழுந்ததற்காக அவசர சங்கிலியை இழுத்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்
வெள்ளி 31, அக்டோபர் 2025 11:59:20 AM (IST)

தமிழர்கள் மீது வன்மத்தை வெளிப்படுத்துவதா? - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
வெள்ளி 31, அக்டோபர் 2025 11:33:19 AM (IST)


.gif)
indianAug 9, 2024 - 09:27:39 PM | Posted IP 172.7*****