» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

செவ்வாய் 9, ஜூலை 2024 12:12:33 PM (IST)ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு இன்று காலை நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்குடி மற்றும் உறவினர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory