» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசியில் தனியார் பஸ் மீது லாரி மோதல் சிறுவன் உட்பட 3 பேர் பலி: 15 பேர் படுகாயம்

வியாழன் 13, ஜூன் 2024 9:21:11 PM (IST)



தென்காசி அருகே டிப்பர் லாரி மோதி தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஸ்சில் பயணம் செய்த 4வயது சிறுவன் உட்பட இரண்டு பெண்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர்.

தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இன்று பிற்பகல் தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை வாசுதேவநல்லூர் அருகேயுள்ள ஏமன்பட்டியைச் சேர்ந்த சின்னத்துரை மகன் வின்னேஷ் (27) ஒட்டிச் சென்றார். பஸ்  தென்காசி அருகே கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இலத்தூர் விலக்கு ரவுண்டானா பகுதியில் சென்ற போது கேரளாவிற்கு கனிமவளங்களை ஏற்றிச் செல்ல செங்கோட்டை சாலையில் இருந்து வந்த டிப்பர் லாரி திடீரென தனியார் பஸ் மீது மோதியது. இதில்; தனியார் பஸ் சாலையில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் சிவராமபேட்டை வடக்கு  தெருவைச் சேர்ந்த மாரிதுரை மனைவி அழகு சுந்தரி (35), சங்கரன்கோவில் லெட்சுமியாபுரம் 5வது தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி செல்வி (55) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இறந்த அழகுசுந்தரி தனது 4வயது மகன் அஷ்சய பாலாவை கைளால் அணைத்துக் கொண்டு இருந்ததை காண முடிந்தது. அச்சிறுவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். அச்சிறுவனையும், மற்றொரு குழந்தையையும் தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி தனது வாகனத்தில் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். 

ஆனால் செல்லும் வழியிலேயே அஷ்சய பாலா பரிதாபமாக இறந்தான்.மேலும் இந்த விபத்தில் பஸ் டிரைவர் விக்னேஷ், பயணிகள் குமந்தாபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மூக்கன் மகன் ஐயப்பன் (57), சிவராமபேட்டை சிவன்கோவில் தெருவைச் சேர்ந்த மாரிதுரை மனைவி இந்துஜா (24), சிவராமபேட்டை மெயின் ரோட்டைச் சேர்ந்த கணேசன் மனைவி சீதாலட்சுமி (50), ஸ்ரீவில்லிபுத்தூர் அசோக்நகரைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி தனலட்சுமி (57), ஸ்ரீவில்லிபுத்தூர்  தாமரை நகரைச் சேர்ந்த முருகன் மனைவி கார்த்திகா (23), மேலசொக்கம்பட்டியைச் சேர்ந்த பரமுசாமி மனைவி சிவன்தாய் (55), கொட்டாகுளம் ஆர்.சி.காலனியைச் சேர்ந்த முருகன் மனைவி ஜெயமுருகேஸ்வரி (45), காயல்பட்டணம் சித்தன் தெருவைச சேர்ந்த மீரான் மனைவி ரமிஷா (55), 

கடையநல்லூர் அமீனாள் அம்மா தெருவைச் சேர்ந்த சப்புர்தீன் மனைவி பாத்திமா (38), இடைகால் சங்குபுரம்  சத்துணவு கூட தெருவைச் சேர்ந்த தர்மராஜ் மனைவி பேச்சியம்மாள் (37), தென்காசி வேம்படி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த உசேன் மகன் இஸ்மாயில் (30), குமந்தாபுரத்தைச் சேர்ந்த அய்யப்பசாமி மகன் பரத் இல்லியாஸ் (3), கேரளாவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி விலாசினியம்மாள் (60) ஆகிய 15 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் விரைந்து சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். அப்போது மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இலத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஜெ.சி.பி.இயந்திரம் உதவியால் கவிழ்ந்த தனியார் பஸ் மீட்கப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory